அடிக்க கூடும் கைகளுக்கிடையே
வெறும் சப்தத்தை பிரசவித்துவிட்டு
தன் மரணத்தை தள்ளிப்போடுகிறது
பறக்கும் கொசு!
-0-
பொரி அள்ளும் பிள்ளையை
சிந்தாமல் தின்றென அதட்டும்போதே
பிதுங்கிச் சிதறியோடுகிறது
என் விரலிடுக்கில் சில
-0-
கல்லுக்குள் ஒளிந்துகிடக்கும் தன்னை
எந்தக் கடவுளும் ஈன்றெடுப்பதில்லை
செதுக்கிப் பிரசவிக்கும் சிற்பியை
எவரும் கடவுளாய் நினைப்பதில்லை
-0-
எங்கோ எதற்கோ யாரிடமோ
ஏதாவது ஒரு பொய்
உதிர்ந்துகொண்டேயிருக்கிறது
சிலநேரங்களில் நம்மிடமே நாமும்
-0-
4 kavithaikalum arumai... athil 2nd KALAKKAL.
ReplyDeleteArumai.
ReplyDeleteஅழகான கவிதைத்துளிகள்...
ReplyDeleteஆமாங்ணா.
ReplyDeleteclever கொசு:))! அனைத்தும் நன்று:)!
ReplyDeleteசாதாரணமாக நடக்கும் விஷயங்களாக வாழ்வில் நகர்ந்துகொண்டிருந்தாலும் உற்று யோசித்தால் அதற்குள்ளும் தத்துவம் நிறைந்த்துதானிருக்கிறது !
ReplyDeleteஅனைத்தும் நன்று அதிலும் முதலாவது மிக நன்று கதிர்
ReplyDeleteகொசு விரட்டுவதை யெல்லாம் கவிதையாக்கி...எங்கேயோ பொறி தட்டுதங்கோ..
ReplyDeleteஎங்கோ எதற்கோ யாரிடமோ
ReplyDeleteஏதாவது ஒரு பொய்
உதிர்ந்துகொண்டேயிருக்கிறது
சிலநேரங்களில் நம்மிடமே நாமும்]]
நிதர்சணம்
உண்மைய படிக்கும்போது..உள்ளம் குருகுருக்குதய்யா...!
ReplyDeleteமூன்றாவது கவர்ந்தது.
ReplyDeleteகவிதைகள் அனைத்தும் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
சிற்பியை யாரும் கடவுளாய் நினைப்பதில்லை .... சிந்திக்கதூண்டும் வார்த்தைகள்.குட்டிக்குட்டி கவிதைகள் ஆனால்பெரிய பெரிய சிந்தனைகள்.அருமை கதிர் .உங்களுக்கு மட்டும் எப்படி இது மாதிரி எல்லாம் வருகிரது?
ReplyDelete