Monday, 25 July 2011

விதி வலியது


அடிக்க கூடும் கைகளுக்கிடையே
வெறும் சப்தத்தை பிரசவித்துவிட்டு
தன் மரணத்தை தள்ளிப்போடுகிறது 
பறக்கும் கொசு!

-0-

பொரி அள்ளும் பிள்ளையை
சிந்தாமல் தின்றென அதட்டும்போதே
பிதுங்கிச் சிதறியோடுகிறது 
என் விரலிடுக்கில் சில

-0-

கல்லுக்குள் ஒளிந்துகிடக்கும் தன்னை
எந்தக் கடவுளும் ஈன்றெடுப்பதில்லை
செதுக்கிப் பிரசவிக்கும் சிற்பியை 
எவரும் கடவுளாய் நினைப்பதில்லை
  
-0-

எங்கோ எதற்கோ யாரிடமோ
ஏதாவது ஒரு பொய்
உதிர்ந்துகொண்டேயிருக்கிறது
சிலநேரங்களில் நம்மிடமே நாமும்

-0-

13 comments:

  1. 4 kavithaikalum arumai... athil 2nd KALAKKAL.

    ReplyDelete
  2. அழகான கவிதைத்துளிகள்...

    ReplyDelete
  3. clever கொசு:))! அனைத்தும் நன்று:)!

    ReplyDelete
  4. சாதாரணமாக நடக்கும் விஷயங்களாக வாழ்வில் நகர்ந்துகொண்டிருந்தாலும் உற்று யோசித்தால் அதற்குள்ளும் தத்துவம் நிறைந்த்துதானிருக்கிறது !

    ReplyDelete
  5. அனைத்தும் நன்று அதிலும் முதலாவது மிக நன்று கதிர்

    ReplyDelete
  6. கொசு விரட்டுவதை யெல்லாம் கவிதையாக்கி...எங்கேயோ பொறி தட்டுதங்கோ..

    ReplyDelete
  7. எங்கோ எதற்கோ யாரிடமோ
    ஏதாவது ஒரு பொய்
    உதிர்ந்துகொண்டேயிருக்கிறது
    சிலநேரங்களில் நம்மிடமே நாமும்]]

    நிதர்சணம்

    ReplyDelete
  8. உண்மைய படிக்கும்போது..உள்ளம் குருகுருக்குதய்யா...!

    ReplyDelete
  9. மூன்றாவது கவர்ந்தது.

    ReplyDelete
  10. கவிதைகள் அனைத்தும் அருமை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சிற்பியை யாரும் கடவுளாய் நினைப்பதில்லை .... சிந்திக்கதூண்டும் வார்த்தைகள்.குட்டிக்குட்டி கவிதைகள் ஆனால்பெரிய பெரிய சிந்தனைகள்.அருமை கதிர் .உங்களுக்கு மட்டும் எப்படி இது மாதிரி எல்லாம் வருகிரது?

    ReplyDelete

இது படிச்சீங்களா?